அரியலூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் கீழ் இயங்கும் Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
🏛 பணியிட விவரங்கள்:
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்(Chief Legal Aid Defense Counsel ) | 1 |
டெபியூட்டி தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்(Deputy Chief Legal Aid Defense Counsel) | 3 |
உதவி ஆலோசகர்(Assistant Legal Aid Defense Counsel) | 6 |
அலுவலக உதவியாளர்/கிளார்க்(Office Assistant / Clerk) | 3 |
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்(Receptionist Cum Data Entry Operator (Typist)) | 1 |
அலுவலக ப்யூன்(Office Peon (Munshi/Attendant)) | 3 |
மொத்தம் | 17 |
🎯 வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயதைக் கடந்து இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
🎓 கல்வித்தகுதி:
- தலைமை ஆலோசகர்: சட்டப் பட்டம் + 10 ஆண்டு அனுபவம்
- டெபியூட்டி ஆலோசகர்: சட்டப் பட்டம் + 7 ஆண்டு அனுபவம்
- உதவி ஆலோசகர்: குறைந்தது 3 ஆண்டு குற்றவியல் அனுபவம்
- அலுவலக உதவியாளர் / கிளார்க்: பட்டப்படிப்பு, கணினி + தட்டச்சு திறன்
- டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்: பட்டப்படிப்பு + தட்டச்சு + கணினி அறிவு
- அலுவலக ப்யூன்: 8ம் வகுப்பு தேர்ச்சி
💰 சம்பள விவரம்:
பதவி | மாத சம்பளம் |
---|---|
தலைமை ஆலோசகர் | ₹60,000 – ₹70,000 |
டெபியூட்டி தலைமை ஆலோசகர் | ₹30,000 – ₹50,000 |
உதவி ஆலோசகர் | ₹20,000 – ₹30,000 |
அலுவலக உதவியாளர் / கிளார்க் | ₹12,500 – ₹15,000 |
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் | ₹12,000 – ₹15,000 |
அலுவலக ப்யூன் | ₹10,000 – ₹12,000 |
✅ தேர்வு முறை:
- தேர்வு நேர்காணல் மூலமாக மட்டுமே நடக்கிறது.
- ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்குள் பணியிடம் வழங்கப்படும்.
- தேர்வில் கல்வித் தகுதி, அனுபவம், திறமை ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.
📝 விண்ணப்பிக்கும் முறை:
- https://ariyalur.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 2 புகைப்படங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
- விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்:
District Legal Services Authority,
Combined Court Campus,
Ariyalur – 621 704.
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2025, மாலை 5.30 மணி
- நேர்காணல் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
📥 Download Links
📄 Download Notification📝 Download Application Form